மாவட்ட செய்திகள் நவம்பர் 15,2022 | 00:00 IST
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிபோக்குவரத்து அமைச்சர் சந்திரபிரியங்கா. இவர், நேற்று காலை மழை பாதிப்புகளை பார்வையிட தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். அப்போது, மாணவர்கள் சிலர் புத்தகப் பையுடன் பள்ளிக்கு நடந்து சென்றனர். உடன் அமைச்சர் தனது காரை நிறுத்தி மாணவர்களை காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். பின்னர் இனிப்பு வழங்கி, மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்து கூறினார். அப்போது மாணவர்கள் சிலர், காரில் பாட்டு இல்லையா என கேட்டு, பாட்டு பாடினர். அதனை அமைச்சர் தனது மொபைல்போனில் செல்பி வீடியோ எடுத்தார் பின்னர் நெடுங்காடு அரசு பள்ளியில் மாணவர்களை இறக்கிவிட்டு, தனது ஆய்வுபணிக்கு புறப்பட்டார். பள்ளி மாணவர்களை அமைச்சர் காரில் ஏற்றிமகிழ்ந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. pdy மாணவர்களுடன் மகிழ்ந்த அமைச்சர் பள்ளிக்கு சென்ற மாணவர்களை காரில் ஏற்றிக் கொண்டு, அவர்களுடன் சகஜமாக பேசி மகிழ்ந்தார் புதுச்சேரி அமைச்சர்
வாசகர் கருத்து