மாவட்ட செய்திகள் நவம்பர் 15,2022 | 13:06 IST
சென்னை மாநகராட்சிப் பகுதிகளான முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர் முதலான பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் பாதிப்படைந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தப் பகுதிகளைப் பார்வையிட்ட பின், தமிழக அரசை சாடினார். அமைச்சர்கள் நேரு, அன்பரசன், நாசர் அப்பகுதிகளுக்குச் சென்று நிவாரண உதவிகள் வழங்கி, மருத்துவமுகாம்களை இன்று பார்வையிட்டனர். போரூர் ஏரியின் உபரி நீரால்தான் முகலிவாக்கம் முதலான பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிட்டது. அடுத்தாண்டு ஒரு சொட்டு நீர் கூட வராது என அமைச்சர் நேரு கூறினார்.
வாசகர் கருத்து