மாவட்ட செய்திகள் நவம்பர் 15,2022 | 13:27 IST
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையத்தில் பனியன் கம்பெனி உள்ளது. இங்கு வேலை செய்பவர்களை ஏற்றிக் கொண்டு பஸ் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. பஸ்ஸை டிரைவர் அபூர்வராஜ் ஓட்டினார். 20-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் சென்றது. பஸ்ஸை டிரைவர் பார்த்திபன் ஓட்டினார். 60 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் செம்மிபாளையம் பிரிவு அருகே வந்த போது தனியார் பனியன் கம்பெனி பஸ் மீது கோவை சென்ற பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. பனியன் கம்பெனி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 க்கும் மேற்பட்டவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து