மாவட்ட செய்திகள் நவம்பர் 15,2022 | 15:33 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் நுழைந்த 3 யானைகளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் விரட்டியடித்தனர். அந்த 3 யானைகளும் கிருஷ்ணகிரி நகரை ஒட்டியுள்ள சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் முகாமிட்டுள்ளன. மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரை யானைகள் தாக்கியதில் படுகாயமடைந்தார். மேலும் பொதுமக்கள் யாரும் பாதிப்படையாதவாறு வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மூன்று காட்டு யானைகளும் நகரை ஒட்டியே முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து