மாவட்ட செய்திகள் நவம்பர் 16,2022 | 00:00 IST
நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி, முதுமலை, தெப்பக்காடு, நெலக்கோட்டை மற்றும் மசினகுடி வனச் சரகங்களில் பருவ மழைக்கு பிந்தைய வன விலங்கு கணக்கெடுப்பு இன்று துவங்கியது. இதற்காக வனம் 38 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பகுதிக்கு தலா நான்கு பேர் வீதம் 150 வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விவரங்களை மொபைல் ஆப் மற்றும் டேட்டா சீட்டுகளில் பதிவு செய்கின்றனர். கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தேவைப்பட்டால் மட்டுமே தீப்பந்தம் ஏந்தி கணக்கெடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கணக்கெடுப்பு நாட்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். இப்பணிகள் வரும் 20 ம் தேதி நிறைவடைகிறது.
வாசகர் கருத்து