மாவட்ட செய்திகள் நவம்பர் 17,2022 | 00:00 IST
திருவள்ளுவர்ய் மாவட்டம் திருத்தணி தாலுக்கா தாழவேடு எஸ்டி காலணியை சேர்ந்தவர் சேகர். மனைவி தீபா. நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலி வந்ததால், 108 ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். வேலஞ்சேரி ஏரிக்கரை அருகே சென்றபோது, தீபாவுக்கு வலி அதிகமானது. மருத்துவ உதவியாளர் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். தீபாவுக்கு 3 கிலோ 100 கிராம் எடையில் அழகான ஆண் மகன் பிறந்தான்.
வாசகர் கருத்து