பொது நவம்பர் 18,2022 | 08:15 IST
தீபாவளிக்கு மறுநாள் அளித்த விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஏற்கனவே அறிவித்தபடி குரூப் 1 தேர்வு நாளை நடக்க உள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆசிரியர்களுக்கு கண்காணிப்பாளர் பணியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் பிளஸ் 1, பிளஸ் 2 க்கு நாளை பருவ இடைத்தேர்வும் நடக்கிறது. இதனால் பள்ளிக்கு வர வேண்டுமா , அல்லது தேர்வு பணிக்கு செல்ல வேண்டுமா என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தெளிவான முன் அறிவிப்பு வெளியிட பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வாசகர் கருத்து