மாவட்ட செய்திகள் நவம்பர் 18,2022 | 00:00 IST
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து கரடிவாவி வழியாக ஊத்துக்குளி செல்லும் அரசு பஸ் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளுடன் கரடிவாவி நோக்கி சென்றது. பல்லடம் அடுத்த சின்னியகவுண்டம்பாளையம் பிரிவு அருகே வரும்போது பஸ் பழுதானது. பள்ளி மாணவர்கள் உட்பட பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். பள்ளியில் பருவ தேர்வு நடந்து வரும் நிலையில் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் ரோட்டில் காத்திருந்தனர். தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த பா.ஜ.க.,வினர், வேன் ஏற்பாடு செய்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்கள் வருவதற்கு முன்பாகவே குறித்த நேரத்தில் தேர்வு ஆரம்பித்தது. பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசிய பா.ஜ.க., வினர், தாமதமானதற்கான காரணத்தை எடுத்துக் கூறி அவர்களும் தேர்வு எழுத அனுமதி பெற்று கொடுத்தனர். பா.ஜ.க., வினரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
வாசகர் கருத்து