மாவட்ட செய்திகள் நவம்பர் 19,2022 | 00:00 IST
சென்னை மாநகராட்சி, 11வது மண்டலம் மதுரவாயல் மேட்டுக்குப்பத்தில் இருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும், ரோட்டில் குடி நீர் பராமரிப்பு பணிகள் நடந்தன. அதற்காக பள்ளம் தோண்டி, பின் தார் போட்டு மூடினர். இன்று காலை அந்த இடத்தில் பெரிய பள்ளம் உண்டானது. வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் தடுப்புகல் வைத்தனர். ஆனால் வண்டிகளில் செல்வோர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. ஒப்பந்ததாரர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து