மாவட்ட செய்திகள் நவம்பர் 21,2022 | 00:00 IST
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சி, கிழக்கு ரத வீதி, காந்திபுரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தது. இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் போது குழாய் உடைந்து நீரூற்றுபோல் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்தது. மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் நீரூற்று போல கொட்டிய தண்ணீரை வேதனையுடன் பார்த்து சென்றனர்.
வாசகர் கருத்து