மாவட்ட செய்திகள் நவம்பர் 22,2022 | 12:26 IST
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கத்திக்காரன்பட்டி கிராமத்தில் சுடுகாடு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். யாராவது இறந்தால் வயல்காட்டு வழியாக உடலை துாக்கி கொண்டு சிரமம் அடைகின்றனர். விபத்தில் மூதாட்டி பெரியக்காள் இறந்தார். சுடுகாடு செல்லும் பாதைய தனிநபர் முள்வேலி அமைத்திருந்தார். இதைக் கண்டித்து மூதாட்டி உடலுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
வாசகர் கருத்து