மாவட்ட செய்திகள் நவம்பர் 22,2022 | 00:00 IST
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாகநாதபுரம் கிராமத்தில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த தலைவர் போர்டு ரோட்டோரம் இருந்தது. அதை மர்ம ஆசாமிகள் நேற்றிரவு தீ வைத்து எரித்தனர். கொதிப்படைந்த கிராம மக்கள் போர்டை எரித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். ADSP நமச்சிவாயம் மற்றும் தாசில்தார் அசோக்குமார் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மறியல் கைவிடப்பட்டது. இளையாங்குடி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
வாசகர் கருத்து