மாவட்ட செய்திகள் நவம்பர் 22,2022 | 16:27 IST
காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதிகளில் மெத்தபட்டமைன் மற்றும் போதை மாத்திரை விற்பனை நீண்ட நாளாக நடக்கிறது. கண்காணித்துவந்த போலீசார், காசிமேடு சூர்யா, தண்டையார்பேட்டை ராஜேஷ், சிங்காரவேலன் நகர் கீர்த்தனாவை சோதனை செய்தனர். போதை மாத்திரைகள் வைத்திருந்த அவர்கள், அதை விற்பதையும் ஒத்துக்கொண்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து