மாவட்ட செய்திகள் நவம்பர் 22,2022 | 18:35 IST
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை திட்டக்குடியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவரது மகள் தமிழழகி. வயது 26. கணவர் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். தமிழழகி வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த மூன்று வாலிபர்கள் தமிழழகியை 2019 ல் பாலியல் வன்கொடுமை செய்தனர். மனமுடைந்த தமிழழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்ழக்கில் ஆகாஷ், விக்னேஷ், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வந்த மூவரும் தமிழழகி குடும்பத்தாரை மிரட்டி வருவதாக பெற்றோர் போலீஸில் புகார் கூறினர். நடவடிக்கை இல்லை.
வாசகர் கருத்து