மாவட்ட செய்திகள் நவம்பர் 23,2022 | 00:00 IST
வேலூர் மாநகராட்சி காட்பாடி ராஜிவ்காந்தி நகர் 3- ஆவது தெருவில் கழிவு நீர் கால்வாய் கட்டப்படாமலேயே, 9 லட்சத்தி 90 ஆயிரத்தில் கட்டி முடித்ததாக துரை என்பவருக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பதில் அளிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், 9 லட்சத்தி 90 ஆயிரம் என்பது 3 தெருக்களுக்கும் ஒதுக்கிய நிதி ஆகும். 2 தெருக்களுக்கு கால்வாய் அமைக்கவே எல்லா நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே முறைகேடு நடைக்கவில்லை. 3 ஆவது தெருவுக்கு கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
வாசகர் கருத்து