மாவட்ட செய்திகள் நவம்பர் 23,2022 | 00:00 IST
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஒட்டப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அல்லிக்காரம்பாளையம் கிராமத்தில் 300 குடும்பங்கள் உள்ளனர். மேற்கு விநாயகர் கோவில் வீதியில் தண்ணீர் தொட்டி, பொது குடிநீர் குழாய் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது. தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருந்து கழிவு நீர் இந்த வீதியில் செல்கிறது. சிலர் இதை தடை செய்ததால் 200 அடி தூரத்திற்கு கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி 50-க்கும் மேற்பட்டோர் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து