அரசியல் நவம்பர் 23,2022 | 17:11 IST
திருச்சி தொட்டியம் அருகே முருங்கை ஊராட்சி தலைவராக இருப்பவர் புனிதா விஜயசேகர். துணைத்தலைவராக இருப்பவர் கருப்பையா. புனிதா அதிமுகவை சேர்ந்தவர். கருப்பையா திமுகவை சேர்ந்தவர். ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முயற்சி எடுக்கும் போதெல்லாம் கருப்பையா முட்டுக்கட்டை போட்டு வருவதாக புனிதா தொடர்ந்து புகார் கூறிவந்தார். இதுகுறி்த்து அதிகாரிகளிடம் பலமுறை புனிதா புகார் கூறியும் எந்த பலனும் இல்லை. இதையடுத்து, துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்களை திரட்டி புனிதா, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார். கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.
வாசகர் கருத்து