மாவட்ட செய்திகள் நவம்பர் 23,2022 | 00:00 IST
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் சில நாட்களுக்கு முன் கன மழை வெளுத்து கட்டியதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணை நீர் மட்டம் 60 அடி உயரம் கொண்டது. நீர் வரத்து அதிகரிப்பால் அணை நீர் மட்டம் 52.83 அடியாக உயர்ந்தது. பாலாறு வழியாக அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 51 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 21 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை குறைந்து வருவதால் உடுமலை பி.ஏ.பி. இரண்டாம் மண்டல இறுதிச் சுற்று பாசன வசதிக்காக அணையில் இருந்து வரும் 25 ம் தேதி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வாசகர் கருத்து