பொது நவம்பர் 23,2022 | 18:46 IST
சென்னை ஆவடி கவுரிபேட்டையை சேர்ந்தவர் பால்பாண்டி வயது 58. ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் சி.வி.ஆர்.டி (CVRD) தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன் ஆவடி ஜே.பி எஸ்டேட்டில் வீடு வாங்கினார். வீட்டுக்கு பெயின்ட் அடிக்கும் பணி நடந்தது. சனி, ஞாயிறு வேலையாட்கள் வரவில்லை. பால்பாண்டி தனியாக பெயின்ட் அடித்தார். திங்கள் காலை பக்கத்து வீட்டில் வசிப்பவர் வந்து பார்த்தபோது, பால்பாண்டி உட்கார்ந்த நிலையில் உடல் கருகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசார் பால்பாண்டி உடலை கைப்பற்றினர். உடலுக்கு பக்கத்திலேயே செல்போன் கிடந்தது. அது, சார்ஜருடன் கனெக்ட் ஆகி இருந்தது. குளித்துவிட்டு வந்த பால்பாண்டி, ஈர கையுடன் சார்ஜரில் இருந்த செல்போனில் பேசியபோது மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே காரணம் தெரிய வரும். இறந்த பால்பாண்டிக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
வாசகர் கருத்து