பொது நவம்பர் 23,2022 | 20:05 IST
சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத். பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனால் ஆவேசமான பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்கள் சாலை அமர்ந்து போராட முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் நேரில் வந்து விசாரித்தார். போலீசார் வினோத் மீது போக்சோ உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான வினோத்தை போலீசார் தேடுகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளிக்கு 1 வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து