பொது நவம்பர் 23,2022 | 21:07 IST
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் வயது 50. காரைக்குடி அருகே மானகிரியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். மக்களுக்கு குறி சொல்கிறார். ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் குறி கேட்க சென்றார். ராமகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. கடைசியாக சென்றபோது 8 வயது மகளையும் அழைத்து சென்றார். அப்போது, சாமியார் ராமகிருஷ்ணன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தந்தை மாவட்ட எஸ்பி செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீசார், சாமியார் ராமகிருஷ்ணனை கைது செய்தனர். சாமியாருக்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வாசகர் கருத்து