பொது நவம்பர் 24,2022 | 07:49 IST
சிக்னல் கோளாறு, செட்டாப் பாக்சில் ஏற்படும் பழுது, ஹெச்.டி செட்டாப் பாக்ஸ் இல்லாதது போன்ற காரணங்களால், அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. 70 லட்சமாக இருந்த கேபிள் இணைப்புகள் இப்போது 21 லட்சமாக சுருங்கிவிட்டது. நான்கு நாட்களாக சிக்னல் கோளாறு காரணமாக, அரசு கேபிள் டிவி முடங்கியது. இன்னும் ஏராளமான வாடிக்கையாளர்கள் DTHக்கு மாறிவிட்டனர். வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க ஹெச்.டி செட்டாப் பாக்ஸ் வாங்க அரசு கேபிள் டிவி நிறுவனம் முன் வந்துள்ளது. அரசு கேபிள் டிவி இணையதளத்தில், எவ்வளவு பாக்ஸ் தேவை என ஆப்பரேட்டர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து