மாவட்ட செய்திகள் நவம்பர் 24,2022 | 12:52 IST
திருப்பத்தூர் அரசுபணிமனையில் இருந்து இன்று காலை திருமால் (45) என்ற டிரைவர் நாராயணபுரத்திற்கு பஸ் எடுத்துச் சென்றார். நாராயணபுரம் பகுதியில் இருந்து சுமார் 50 பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி வந்தபொழுது மழையால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்த பஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஊர் மக்கள் மாணவர்களை மீட்டனர். மாணவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.படுகாயமடைந்த 7 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து