அரசியல் நவம்பர் 25,2022 | 08:41 IST
லோக்சபா தேர்தலில் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா இல்லாத அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ., இடம்பெறவே பழனிசாமி விரும்புகிறார். ஆனால் பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் இணைய வேண்டும்; அதோடு கூட்டு வைத்து 2024 தேர்தலில் வெல்ல வேண்டும் என்பது பா.ஜ. கணக்கு. இதற்காக பா.ஜ. வெற்றியை நிர்ணயிக்கும் 10 தொகுதிகளில் ஒரு தொகுதியை தினகரனுக்கு விட்டுக் கொடுத்து, அனைவரும் ஒன்றிணைய அ.தி.மு.க.விடம் பா.ஜ. மேலிடம் பேச்சு நடத்தியது. பழனிசாமி இன்னும் ஓகே தெரிவிக்கவில்லை. மாறாக தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளை இழுக்க நடந்த அவரது ரகசிய பேச்சும் தோல்வியடைந்தது. வேறு வழி இல்லாமல், பழனிசாமிக்கு பா.ஜ., நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மீதான மத்திய அரசு வழக்குகள், கட்சி பொதுச்செயலர் பதவி, இரட்டை இலை சின்னம் விவகாரங்களில், தனக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என பழனிசாமி கருதுகிறார். அதற்கும் பா.ஜ. மேலிடம் ஆதரவு அவசியம் என்பதால், பிடிவாதத்தை கைவிட முன்வந்துள்ளார். பா.ஜ. விரும்பும் 10 தொகுதிகளை ஒதுக்கவும், அக்கட்சியின் அறிவுரைப்படி அணிகளை இணைக்கவும் ஆலோசிக்கிறார். ஜனவரி 17 எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் இணைப்பு விழா நடத்தப்படலாம் என்கிறது அதிமுக வட்டாரம்.
வாசகர் கருத்து