மாவட்ட செய்திகள் நவம்பர் 25,2022 | 11:42 IST
வட கிழக்குப் பருவ மழையால் தமிழகத்தில் கன மழை பெய்தது. பெரு மழை இனி இருக்காது என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப பனி மூட்டம் வரத் தொடங்கியது. திருவள்ளுவர் மாவட்ட நெடுஞ்சாலைகளில் மக்கள் வாகனங்களில் விளக்குகளை எரியவைத்துச் சென்றனர். பனி மூட்டம் காலை எட்டரை மணி வரை நீடித்தது. அடுத்த சில மாதங்கள் குளிர், பணி என வானிலை மாறப்போகிறது.
வாசகர் கருத்து