சிறப்பு தொகுப்புகள் நவம்பர் 25,2022 | 15:06 IST
சென்னை பள்ளிக்கரணை தாமரை குளம் எதிரே ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. கோயிலை அப்பகுதிவாசிகளே பராமரித்து, விழா நடந்தி பாதுகாத்து வந்தனர். கோயிலுக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. நடுவே கோயில், சுற்றி பூ, வாழை தோட்டத்தை பக்தர்கள் அமைத்து இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் வந்தது. பள்ளிக்கரணையில் நடக்கும் வடிகால் பணிகளில் ஒரு பகுதியை கோயில் பின்புறம் உள்ள ஏரியில் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டது. அதற்காக அப்பகுதியில் பள்ளம் தோண்டி வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வாசகர் கருத்து