மாவட்ட செய்திகள் நவம்பர் 25,2022 | 00:00 IST
துவை அரசின் போக்குவரத்து துறை பெண்களின் நலன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக பெண் ஓட்டுநர்களை ஊக்கப் படுத்த அவர்களுக்கென சனிக்கிழமைகளில் பழகுநர், ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள் ஒட்டுநர், பழகுநர் உரிமம் பெறுவது புதுச்சேரியில் அதிகரித்து வருகின்றது. பெண்களுக்கு இலவச மூன்று சக்கர மின்சார வாகன ஓட்டுநர் பயிற்சி மற்றும் உரிமம் வழங்குவதற்கான துவக்கவிழா புதுச்சேரி சட்டசபையில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி ஆட்டோவை கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து