மாவட்ட செய்திகள் நவம்பர் 25,2022 | 17:33 IST
புதுச்சேரி சாரம் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர் சிவராம ரெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தார். பள்ளிக் கல்வித் துறை துணை ஆய்வாளர் குலசேகரன் தலைமை தாங்கினார், இக்கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் சூழலும் காசு என்ற எளிய முறையில் அமைக்கப்பட்ட ஏடிஎம் மெஷின், மிதக்கும் இரும்புத்துண்டு, ஒளி ஊடுருவும் கேமரா, காகித மின்விசிறி, மாய மாத்திரை போன்ற பல்வேறு விதமான படைப்புகளை சிறுவர்கள் ஆர்வமுடன் காட்சிப்படுத்தினர் கண்காட்சியை பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் மாணவர்களும் பார்வையிட்டனர்.
வாசகர் கருத்து