மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 00:00 IST
தஞ்சாவூர் மாவட்டம்,மருத்துவக்குடி கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் திருப்பணி செய்யப்பட்ட, 84 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் விளக்கு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் கூறி அர்ச்சனை செய்து மங்கள ஆரத்தி எடுத்தனர். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து