மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 16:43 IST
சென்னை தண்டையார்பேட்டை, சுந்தர விநாயகர் நகரில் சுந்தர விநாயகர் கோயில் உள்ளது. 17 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோயிலை அப்புறப்படுத்த கோரி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜி.முத்து வழக்கு தொடர்ந்தார். மாநகராட்சிக்கு சொந்தமான இடமாக இருந்தால் இடிக்கலாம் என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கோயிலை இடிக்க வந்தனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இடிக்கும் பணிகள் நடக்கவில்லை. தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து