Advertisement

புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது!

மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 00:00 IST

Share

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் மற்றும் மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. நடப்பு ஆண்டு, முதல் கட்டமாக தெப்பக்காடு, முதுமலை, கார்குடி, நெலக்கோட்டை, மசினகுடி வனச் சரகங்களுக்கு உட்பட்ட 191 இடங்களில் தலா இரண்டு தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் கூறியதாவது, 'முதுமலையில், மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணிக்காக, இரண்டு சதுர கி.மீ., பரப்பளவுக்கு இரண்டு கேமராக்கள் வீதம், 191 இடங்களில், 382 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது, கேமராக்களில் பதிவாகும் படங்கள் மற்றும் வீடியோக்களின் அடிப்படையில் கணக்கெடுப்பு பணி நடைபெறும்' என கூறினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X