சிறப்பு தொகுப்புகள் நவம்பர் 26,2022 | 16:54 IST
திருவாரூர் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் 12 மாணவிகள் பருவத் தேர்வில் அதிக மார்க் எடுத்து பாரதிதாசன் பல்கலைகழக அளவில் சிறப்பிடம் பெற்றனர். மாணவிகளை கவுரவிக்க கல்லூரி நிர்வாகம் முடிவு எடுத்தது. ஏழை மாணவிகள் 8 பேரை தேர்ந்தெடுத்து ஒருநாள் முதல்வராக நியமித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ஒரு நாள் முதல்வராக கல்லூரி முழுதும் உள்ள வகுப்பறைகளுக்கு சென்று மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். கருத்துக்களை கேட்டறிந்தனர்.
வாசகர் கருத்து