மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 18:44 IST
கோவை காந்திபுரம் போலீசார், சோமசுந்தரம் மில் ரயில்வே பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். தடை செய்யப்பட்ட வெவ்வேறு வகை குட்கா பொருட்கள் 346 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்ததில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுஜாராம், கோவிந்த் மீனா, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த செந்தில்வேல் ஆகியோர் குட்கா பொருட்களை கடத்தியது தெரிந்தது.
வாசகர் கருத்து