மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 19:59 IST
மதுரை ஐராவதநல்லுாரை சேர்ந்தவர் அருள்ராஜ். பெண் ஒருவருக்கு விதவை சான்று கேட்டு வருவாய் ஆய்வாளர் வாசுகி, சக்கிமங்கலம் விஏஓ ராணியிடம் விண்ணப்பித்தார். இருவருமே தலா 500 ரூபாய் லஞ்சம் கேட்டனர். அருள்ராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார். போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோ ஆதாரத்துடன் வரும்படி கூறினர். இதையடுத்து வாசுகி லஞ்சம் வாங்கும் வீடியோ, ஆடியோவை தனது செல்போனில் அருள்ராஜ் ரகசியமாக பதிவு செய்தார். அதை லஞ்ச ஒழிப்பு போலீசில் கொடுத்தார். எனினும் நடவடிக்கை எடுக்கவில்லை.
வாசகர் கருத்து