மாவட்ட செய்திகள் நவம்பர் 27,2022 | 11:52 IST
வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்திலிருந்து திருவண்ணாமலைக்கு திருக்குடை விழா நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடக்கும் தீப விழாவுக்கு வேலூரில் இருந்துஆண்டுதோறும் திருக்குடைகள் அனுப்பப்படும். இந்நிகழ்ச்சி சிவ ஸ்ரீ பிரத்யங்கரா தாசன் தலைமையில் நடந்தது. வேலுாரில் இருந்து குடைகளை எடுத்து சென்று திருவண்ணாமலை கோயிலில் ஒப்படைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் மகாதேவமலை மகானந்த சித்தர் சுவாமி ஜலகண்டீஸ்வரர், ஆலய செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோரும் திரளான சாதுக்கள் துறவிகளும் கலந்துகொண்டனர் இதில் சிவன் வேடம் உள்ளிட்ட வேடங்களை அணிந்த பக்தர்கள் திருவூடல் இசைக்கு பக்தி பரவசத்துடன் நடனமாடினார்கள்
வாசகர் கருத்து