மாவட்ட செய்திகள் நவம்பர் 27,2022 | 12:35 IST
கடலூர் மாவட்டம், ஜெயங்கொண்டான் கிராமத்தில் மின் மோட்டார் பழுதாகி, இதுவரை சரி செய்யவில்லை. ஒரு மாத காலமாக குடிநீர் வராததால் கிராம மக்கள் ஊராட்சி தலைவர் உமாராணி, துணைத் தலைவர் , பழனி ஆகியோரி டம் பலமுறை கோரிக்கை வைத்தும் தீர்க்கவில்லை. இதனால் மக்கள் காலி குடங்களுடன் சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று மாலைக்குள்மின் மோட்டார் சரி செய்து குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்ததால் மக்கள் மறியலை விலக்கிக் கொண்டனர் . இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து