மாவட்ட செய்திகள் நவம்பர் 27,2022 | 13:04 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நாடுகாணி செக் போஸ்ட் மாநில எல்லையாக உள்ளது. இங்கு கூடலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எடை மேடை அமைத்துள்ளனர். கேரளாவிலிருந்து 'எம் சாண்ட்' எனப்படும் கல்துாசி ஏற்றிக் கொண்டு தமிழகம் வரும் லாரிகள் அதிக பாரத்துடன் வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தமிழக - கேரளா லாரி உரிமையாளர்கள் இடையே மோதல் வெடித்தது. தேவாலா போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. வாட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ், எஸ்ஐக்கள் பிரபாகரன், திருகேஷ்வரன், ஞானசேகர் முன்னிலை வகித்தனர். இருதரப்பினர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து