மாவட்ட செய்திகள் நவம்பர் 27,2022 | 13:23 IST
தென் கைலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 6 ம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. விழாவின்போது மாலை 6 மணிக்கு உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள 50 அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரையில் 300 மீட்டர் நீளமுள்ள மெகா திரி வைத்து, நல்லெண்ணெய், நெய் மற்றும் இலுப்பை எண்ணெய் கலவையில் 900 லிட்டர் எண்ணெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்படும்.
வாசகர் கருத்து