பொது நவம்பர் 27,2022 | 13:44 IST
காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடியை சேர்ந்தவர் பாஸ்கர் 12 ஆண்டாக இயற்கை விவசாயம் செய்கிறார். தற்போது 5 ஏக்கர் நிலத்தில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு உள்ளார். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சேகரிக்கப்பட்ட பாரம்பரிய ரகங்களை அவர் பயிரிட்டுள்ளார். ஒவ்வொரு ரகமும் தனித்தனி மருத்துவ குணம் கொண்டுள்ளது என்கிறார் பாஸ்கரன். காரைக்காலில் ஒரு காலத்தில் விளைந்த கட்டைசம்பா பயிரை தேடி கண்டுபிடித்து மீண்டும் அதனை பயிர் செய்துள்ளார். இதனை மற்ற விவசாயிகளுக்கு விதை நெல்லாக வழங்கவும் முடிவு செய்துள்ளார். இந்தியா வரைபடம் போல நெற்பயிர்களை நடவு செய்து இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வையும் பாஸ்கர் ஏற்படுத்தி வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்க தொகை வழங்கி, பயிர்களை சந்தைப்படுத்தவும் உதவ வேண்டும் என அரசுக்கு பாஸ்கர் கோரிக்கை விடுக்கிறார்.
வாசகர் கருத்து