மாவட்ட செய்திகள் நவம்பர் 27,2022 | 18:38 IST
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜ்நகரை சேர்ந்தவர் பெரியசாமி. கூலி தொழிலாளி. இவரது மகள் அமிர்தஸ்ரீ வயது 11. 6 ம் வகுப்பு படித்தார். வேலம்பட்டி முதலியார் குளத்தில் அமிர்தஸ்ரீ, தாயார் யுவன்யாவுடன் துணி துவைக்க சென்றார். குளத்தில் இறங்கி குளித்த அமிர்தஸ்ரீ கால் வழுக்கி குளத்தில் மூழ்கி பலியானார். தீயணைப்பு வீரர்கள் சிறுமி உடலை மீட்டனர். போலீஸ் விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து