பொது நவம்பர் 28,2022 | 08:22 IST
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தீப திருவிழா நடந்து வருகிறது. முதல் நாள் விழாவில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனம், சுப்பிரமணியர் மயில் வாகனம், அருணாச்சலேஸ்வரர் வெள்ளி அதிகார நந்தி வாகனம், பராசக்தி அம்மன் ஹம்ச வாகனம், சண்டிகேஸ்வரர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினர். சுவாமிகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 10 நாட்கள் விழா நடக்கிறது. டிசம்பர் 3ம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், 6ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
வாசகர் கருத்து