மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 10:24 IST
விழுப்புரம் மாவட்டம், வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், 30; டிரைவர். இவரும், ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்த சங்கீதா, 24, என்பவரும் 6 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். முத்துக்குமரனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்படும். கடந்த, 4ம் தேதி கணவருடன் சங்கீதா தகராறு செய்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த சங்கீதா உடலில் தீப்பற்றி, படுகாயம் அடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சங்கீதா, நேற்று முன்தினம் இறந்தார்.
வாசகர் கருத்து