மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 11:17 IST
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் ஊர் மக்கள் சேர்ந்து 8-வது ஆண்டாக மாவட்ட வாலிபால் போட்டிகளை நடத்தினர். இளைஞர்கள், மாணவர்கள் ஒற்றுமையை போற்றும் வகையில் போட்டிகள் நடந்தன. பத்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்ட போட்டிகளில், தொண்டி பாவோடி பாய்ஸ் அணியும், ஒய்.எம்.டி.கே அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. முடிவில் தொண்டி பாவோடி பாய்ஸ் அணி முதலிடம் பிடித்து சுழற்கோப்பை மற்றும் பணப்பரிசினை பெற்றுச் சென்றது. இரண்டாவது இடத்தை YMTK அணி பிடித்தது.
வாசகர் கருத்து