அரசியல் நவம்பர் 28,2022 | 11:41 IST
கோவை - திண்டுக்கல் இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை 2009ல் அகற்றினர். அகல ரயில் பாதையாக மாற்றும் பணி துவங்குச்சு. மத்த வழித்தட பணிகள் வேகமா முடிஞ்சுது. ஆனா போத்தனூர்- பொள்ளாச்சி இடையே 40கிமீ வழித்தடம் பணி மட்டும், இழுபறியானது. . காங்கிரஸ் ஆட்சியில துவங்கிய இந்த பணியை ,ஒரு வழியா 2017ல தான் முடிச்சாங்க. இதுக்காக மொத்தம் 1000 கோடி ரூபாய்க்கு மேல செலவு ஆச்சாம். இந்த திட்டத்துல மிகப்பெரிய ஊழல் நடந்து இருக்குறதாவும், விசாரணை கமிஷன் வச்சு இத பத்தி விசாரணை நடத்தணும்ன்னு , கோவைக்கும் டெல்லிக்கும் போய்ட்டு இருக்குற அந்த மக்கள் பிரதிநிதி பகிரங்கமா குரல் குடுத்தாரு. சில தன்னார்வலர்களும் அவருக்கு ஆதரவு கொடுத்தாங்க. ஆரம்பத்துல டெரர் காட்டிய அந்த மக்கள் பிரதிநிதி இப்ப பொட்டிப்பாம்பா அடங்கிட்டாராம். இது தான் பலருக்கு சந்தேகத்த கிளப்பி இருக்கு. இந்த மாதிரி ஊழல் நடந்தது பத்தி முதல்ல ஆவேசமா குரல் குடுத்துட்டு, பின்னாடியே கான்ட்ராக்டர் , அதிகாரிகள் கிட்ட லம்பா கறந்துட்டு, துண்டை மடிச்சு தோள்ல போட்டுட்டு போறது தான் பல அரசியல்வாதிகளோட ஸ்டைல். இவரும் அதே பார்முலாவை பின்பற்றுறாரோன்னு பலர் கிசுகிசுக்கிறாங்க. குரல் கொடுத்த சமூக ஆர்வலர்களும் சுமூகமா பேசி முடிக்க நட ராஜா சர்வீஸ்க்கு போனதா தகவல்.
வாசகர் கருத்து