மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 00:00 IST
தேனி மாவட்டத்தின் டி.புதுக்கோட்டை கிராமத்தில் 20 நாளாக குடி நீர் வரவில்லை என மக்கள் புகார் கூறினர். அரசு தரப்பில் அலட்சிய பதில்கள் வந்ததை அடுத்து, அரசு பஸ்சை சிறைப் பிடித்து சாலை மறியலில் இறங்கினர். போடி தாலுகா போலீசார் வந்து சமாதானம் செய்தனர். அதிகாரிகளுடன் பேசி ஒரு வாரத்திற்குள் குடி நீர் கிடைக்கும் என்றனர். சொன்னபடி நடக்காவிட்டால் அடுத்து கலெக்டர் ஆபிஸ்தான்... என்ற எச்சரிக்கையுடன் டி.புதுக்கோட்டை கிராம போராளிகள் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து