மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 13:40 IST
கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் ஆறு ஊராட்சிகளில் தொழிற்பேட்டை அமைக்க 3731 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கிராமங்களில் சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட்டு தங்கள் பகுதியே பாலைவனமாக மாறும் எனவும், இந்த திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தியும் விவசாயிகள் அன்னூரில் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து