மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 14:00 IST
தேனி மாவட்டம் போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் எந்தப் பணியும் நடக்கவில்லை என பாஜக குற்றம் சாட்டியது. நிதி இல்லை என நகராட்சி நிர்வாகத்தினர் கூறினர். இதையடுத்து போடி நகர பாஜகவினர், பஸ் நிலையத்தில் இருந்து, நகராட்சி அலுவலகம் வரை திருவோடு ஏந்தி பிச்சை எடுத்தனர். அந்தப் பணத்தை நகராட்சியில் ஒப்படைக்க போகும் போது போலீசார் தடுத்தனர். இரு தரப்புக்கும் வாக்கு வாதம் நடந்தது. பின்னர், 9வது வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட சிலர் நகராட்சிக்குள் சென்று, திருவோடு பணத்தை வைத்துவிட்டு வெளியே வந்தனர்.
வாசகர் கருத்து