அரசியல் நவம்பர் 28,2022 | 14:14 IST
அரசு பள்ளி மாணவர்களிடம் அறிவியல், கணித கருத்துக்கள் குறித்த ஆர்வத்தை வளர்க்க 'வானவில் மன்றம்' திட்டத்தை திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 13,200 பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 20 லட்சம் மாணவர்கள் பயனடைவர். திட்டத்துக்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2000 ஆர்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2015ல் மத்திய அரசால் 'ராஷ்ட்ரிய அபிஷ்கார் அபியான்' என்ற பெயரில் துவங்கப்பட்ட திட்டம், தமிழக பள்ளிகளில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த திட்டத்தை 'வானவில் மன்றம்' என்ற பெயரில் கல்வித்துறை புதிதாக செயல்படுத்துகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.
வாசகர் கருத்து