பொது நவம்பர் 28,2022 | 15:38 IST
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹனுமர் படித்துறை பகுதியில் பாரதியார் வாழ்ந்த வீடு உள்ளது. 'சிவமடம்' என்று அழைக்கப்படும் அந்த வீட்டில் 1898 முதல் 1902 வரை பாரதி வாழ்ந்தார். தற்போது அவரது உறவினர்கள் வசித்து வருகின்றனர். வாரணாசியில் காசி - தமிழ்சங்கமம் நடந்து வரும் நிலையில், வீட்டை புனரமைத்து, ஒரு பகுதியில் நினைவிடம் அமைக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்தது. இதற்காக பாரதியார் குடும்பத்தினருடன் வாரணாசி கலெக்டரான, தமிழகத்தை சேர்ந்த ராஜலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். புனரமைக்க அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். நினைவிடத்தில் பாரதியின் படைப்புகளும், முப்பரிமாணத்தில் பாரதி பாரதி வீட்டில் நடப்பது போன்ற காட்சியும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வீட்டின் ஒரு அறையில் 18 லட்ச ரூபாய் செலவில் தமிழக அரசு, பாரதி சிலையுடன் நூலகம் அமைக்கும் பணியை செய்து வருகிறது. பணிகள் முடிந்ததும் அதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்க இருந்தார். தற்போது உத்தரபிரதேச அரசும் வீட்டை புரனமைத்து நினைவிடம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதனால் நூலக திறப்புக்கு உத்தரபிரதேச அரசு அனுமதி அளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வாசகர் கருத்து