மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 18:18 IST
மயிலாடுதுறை மாவட்டம், கரைமேடு கிராமத்தில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தலைமை ஆசிரியராக சாமுவேல் செல்லதுரை, 50 உள்ளார். 54 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 104 பேர் கல்வி படிக்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர். சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாசகர் கருத்து